தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரம்யா கிருஷ்ணனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வனிதா - பிபி ஜோடிகள்

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜய்குமார் நேருக்கு நேர் ரம்யா கிருஷ்ணனுடன் மோதிக் கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிபி ஜோடிகள்
பிபி ஜோடிகள்

By

Published : Jul 15, 2021, 10:52 PM IST

நிகழ்ச்சியிலிருந்து விலகல்

பிக்பாஸ் ஜோடிகள் கலந்துகொண்டுள்ள, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக நடிகை வனிதா விஜய்குமார் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், தனக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகிக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ப்ரோமோ வெளியீடு:

இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வனிதா காளி வேடமணிந்து மிகவும் ஆக்ரோஷமாக நடனமாடுகிறார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்க, மற்ற போட்டியாளர்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என வனிதா கூறியுள்ளார்.

எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும்?

அதற்குக் கடுப்பான ரம்யா, போட்டியில் எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும்? எனத் தெரிவிக்க, கோபமாக வனிதா விஜய்குமார் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறுகிறார்.

சீனியர் நடிகைகள் இரண்டு பேர் நிகழ்ச்சியில் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க:15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த 'கனா காணும் காலங்கள்' குடும்பம்

ABOUT THE AUTHOR

...view details