தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஓடிடியின் வரவு அதிகரித்தது. தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
கரோனா ஊரடங்கு முடிந்து கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு சில படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும், பொதுமக்கள் திரையரங்கு வர ஆர்வம் காட்டாததால் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் பொங்கலன்று வெளியான விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்ததால், வசூலில் வெற்றிபெற்றது.
எனினும் சூர்யாவின் 'சூரரை போற்று', விஜய் சேதுபதியின் 'கபெ ரணசிங்கம்', ஆர்ஜே பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிபெற்றன.
ஓடிடி தளங்களின் வரவால் அதிர்ச்சி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 45 நாட்களுக்குப்பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருந்தாலும் ஓடிடியில் படங்கள் வந்துகொண்டுதான் இருந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திரையரங்குகளை மீண்டும் மூடும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக தயாரிப்பாளர்களின் கவனம் மீண்டும் ஓடிடி பக்கம் திரும்பியது. படத்தின் முதலீடு மற்றும் தயாரிப்பாளரின் பணப்பிரச்னை ஆகியவையே இதற்கு காரணம் என கூறப்பட்டது.
ஆர்யா நடித்த 'டெடி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'ஜகமே தந்திரம்' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் ஓடிடியில் வெளியாவதை தனுஷ் விரும்பவில்லை என்றாலும் தயாரிப்பாளரின் முடிவால் அதிருப்தி அடைந்தார். மேலும் விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி', நயன்தாராவின் 'நெற்றிக்கண்', ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகிறது.
இந்நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் இன்று (ஜூலை.8) முதல் பிரைம் தினத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இந்த மாதம் கடைசி வரை புதியப்படங்கள் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.
அந்த வகையில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழ் - சார்பட்டா பரம்பரை/தெலுங்கு - சார்பட்டா – ஜூலை 22
'சார்பட்டா' என்பது 1970இல் மெட்ராஸின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு தமிழ் விளையாட்டு சார்ந்த படம், அந்தக் காலத்தின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.
டூஃபான் (இந்தி) – ஜூலை 16