வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நாளே அமெரிக்கர்களுக்கான அமைதி நாள் என பாடகி லேடி காகா குறிப்பிட்டுள்ளார்.
பைடன் பதவியேற்கும் நாள் அமைதியான நாள் - லேடி காகா - அமெரிக்காவை கொண்டாடுவோம்
‘அமெரிக்காவை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர் டாம் ஹேங்ஸ் தொகுத்து வழங்க இருக்கிறார்.
![பைடன் பதவியேற்கும் நாள் அமைதியான நாள் - லேடி காகா Lady Gaga on Biden's inauguration](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10310299-698-10310299-1611132552968.jpg)
Lady Gaga on Biden's inauguration
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜோ பைடன் பதவியேற்கும் நாள், அமெரிக்கர்களுக்கு அமைதி அளிக்கும் நாளாக இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். அது வெறுப்பை உமிழாத காதலுக்கான நாள். மக்கள் பயமறியாத நாள். நம் எதிர்கால கனவுகளுக்கான நாள் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு முடிந்தவுடன் நடைபெறவிருக்கும் ‘அமெரிக்காவை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர் டாம் ஹேங்ஸ் தொகுத்து வழங்க இருக்கிறார்.