தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நெட்பிளிக்ஸில் வெளியாகிறது திலோத்தமா சோமின் ‘சார்’ - சார்

திலோத்தமா சோம் நடிப்பில் உருவான இஸ் லவ் எனஃப் ‘சார்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tillotama Shome-starrer 'Sir' to release on Netflix
Tillotama Shome-starrer 'Sir' to release on Netflix

By

Published : Jan 7, 2021, 5:54 PM IST

மும்பை: சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற திலோத்தமா சோமின், இஸ் லவ் எனஃப் ‘சார்’ நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

கணவனை இழந்த பணிப்பெண்ணுக்கும், நிச்சயதார்த்ததை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் இருந்து திரும்பும் அவரது முதலாளிக்கும் இடையேயான உணர்வு கலந்த உறவே இஸ் லவ் எனஃப் ‘சார்’. பணிப்பெண்ணாக திலோத்தமாவும், முதலாளியாக விவேக் கோம்பெரும் நடித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், 2019ஆம் ஆண்டு வெளியாகவிருந்தது. ஆனால், கரோனா காரணமாக இதன் வெளியீடு தள்ளிப்போனது. பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. தற்போது இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெரா இயக்கிய இந்த சுயாதீன திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு நன்றி தெரிவித்த ஜெரா, இந்த சுயாதீன திரைப்படத்துக்கு ரசிகர்கள் அளித்த அன்பும் ஆதரவும் மறக்க முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details