சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள காணொலியில்,
”1. திரையரங்க உரிமையாளர், அவர்கள் சொந்த செலவிலேயே டிஜிட்டல் புரொஜெக்ட்டர்களை அமைத்துக் கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடமிருந்து பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான் செலுத்த வேண்டும்.
2. Virtul print fees Charges என்ற பெயரில் தயாரிப்பாளர்களிடம், விநியோகஸ்தர்களிடம் எந்தத் தொகையும் பெறக்கூடாது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடிகள் செலுத்தப்பட்டுள்ளன.
3. மேலும் உலகம் முழுவதும் VPF கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்தக் கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
4. இதை ரத்து செய்வதன் மூலம் சிறிய படத்தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு 25 லட்சங்கள், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதிகளுக்கு ரூபாய் 1 கோடி 25 லட்சங்கள், ஆயிரம் பிரதிகளுக்கு இரண்டு கோடியே 50 லட்சங்கள் வரை பயனடையலாம்.
டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள வீடியோ எனவே வருங்காலத்தில் திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களையும் விநியோகஸ்தர்களையும் VPF தொகையை செலுத்துமாறு வலியுறுத்தக்கூடாது என்ற கோரிக்கையினை வைக்கிறோம். தேவைப்பட்டால் படத்தின் பிரதியை ஹார்ட் டிஸ்க்கில் கொடுத்து விடுகிறோம். அதற்கான செலவு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரைதான் ஆகும். அதனை நாங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுடன் கலந்து பேசி ஏற்றுக் கொள்கிறோம்.
மேற்படி கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களிடம் வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை