தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அறுவை சிகிச்சை செய்த அர்ச்சனா - தற்போதைய நிலை என்ன? - VJ Archana Health Condition

மூளையில் அறுவை சிகிச்சை செய்த முன்னணித் தொகுப்பாளினி அர்ச்சனா, தான் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில நாள்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா
அர்ச்சனா

By

Published : Aug 27, 2021, 10:03 PM IST

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. இவர் 'பிக்பாஸ் சீசன் 4'-இல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதிலும் அவர் அந்நிகழ்ச்சியில், 'அன்புதான் ஜெயிக்கும்' எனப் பேசிய வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மீம்ஸ்களாக வலம் வந்தது.

இந்நிலையில் அர்ச்சனா திடீரென மூளையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஹலோ என் அன்பான இன்ஸ்டா குடும்பமே. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படக் கூடிய நபர். அதனால் என் மூளை வருத்தமடைந்து விட்டது போல.

தொகுப்பாளினி அர்ச்சனா

ஆம்... என் மூளையில் சிறிய பிரச்னை இருப்பது எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. எனது உடல்நிலை குறித்து எனது மகள் ஜாரா உங்களிடம் தகவல் தெரிவிப்பார்” என முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

அறுவை சிகிச்சை செய்த அர்ச்சனா

அதன்படி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, இரண்டு வாரங்களுக்குப்பின் வீட்டிற்குத் திரும்பினார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அர்ச்சனா, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி தெரிவித்தார்.

அதன்பின் மருத்துவமனையில் இருந்து வீல் சேரில் வெளியே வந்து, அர்ச்சனா காரில் வீடு திரும்பிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. வீட்டிற்கு வந்த அர்ச்சனா தனக்காக வேண்டிப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.

சிகிச்சைக்கும் பின் அர்ச்சனா

இதனையடுத்து, தற்போது அர்ச்சனா தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அறுவை சிகிச்சைக்கு பின் முதன் முதலாக அர்ச்சனா, நேற்று (ஆக. 26) தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘எப்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீர்கள்’ எனக் கேட்டார்.

ரசிகரின் கேள்விக்கு பதில்

அதற்கு அர்ச்சனா பதில் அளித்தாவது, “நீங்கள் கேட்டுக்கொண்டால் இப்போதே நான் வரத் தயார். ஆனால் என்னுடைய வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தோல், தசைகளை வெட்டி எடுத்து அதை என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

அர்ச்சனா

படப்பிடிப்புக்கு சென்றால் அங்கு 15, 16 மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும். என் கால்கள் இன்னும் பலவீனமாக இருக்கிறது. எனவே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில நாள்கள் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி எனக்கு ஒரு பரிசோதனை உள்ளது. அதன் பிறகு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் மீண்டும் வருவேன்" என்றார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் 5: லீக்கான கமல் ஹாசன் புரோமோ புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details