தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செம்பருத்தி தொடர் ஒளிப்பதிவாளர் மரணம்: கதறி அழுத நடிகை! - செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி தொடர் ஒளிப்பதிவாளர் மரண செய்தி கேட்டு நடிகை பரதா நாயுடு கதறி அழுது காணொலி வெளியிட்டுள்ளார்.

செம்பருத்தி
செம்பருத்தி

By

Published : Aug 18, 2020, 2:37 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கார்த்திக் ராஜ், பரதா நாயுடு, ப்ரியா ராமன் ஷபானா, ஜனனி உள்ளிட்டோர் இதில் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் இதில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவந்த அன்பு சமீபத்தில் மரணமடைந்தார். இச்செய்தி செம்பருத்தி தொடர் குழு மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் அவரது மரணச் செய்தியை அறிந்த பரதா நாயுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழுது காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எங்கள் செம்பருத்தி தொடரின் கேமரா மேன் அன்பு மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி இப்போதுதான் தெரிந்தது. எனது ஒன்றரை ஆண்டு செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்திருக்கிறேன்; தனியாக இருந்தேன். அப்போது எனக்கு ஆதரவாக ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்தான் இருந்தார்கள்.

அவரின் இந்தத் திடீர் இழப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details