பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்கள் மூலம் உலகெங்கும் இருக்கும் இசை ரசிகர்களை ஈர்த்தவர். பாப் உலகின் அரசன் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்க இசை விருதுகள் (American Music Awards) 24 விருதுகளை பெற்றிருந்த நிலையில், இவர் 28 விருதுகளை பெற்று புதிய சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாது 10 முறை கிராமிவிருதுகளையும் வென்றுள்ளார்.
பார் முழுசா 'தி மேன்' ஆக மாறியிருக்கும் டெய்லர் ஸ்விஃப்டை பார் - டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய ஆல்பம்
அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தனது புதிய இசை ஆல்பத்தில் ஆண் வேடத்தில் தோன்றி அசைத்தியுள்ளார்.
தற்போது 'தி மேன்' என்னும் புதிய இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் டெய்லர் ஸ்விஃப்ட் தாம் ஆணாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற மனோபாவத்தில் பாடியிருப்பார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களுது பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதில் டெய்லர் ஸ்விஃப்ட் அச்சு அசலாக ஆணாக மாறியிருந்தார். டெய்லர் ஸ்விஃப்ட்டிற்கு ஆண் போன்று ஒப்பனை செய்தவர் பில் கோர்சோ என்னும் ஒப்பனைகலைஞர் ஆவார். சமீபத்தில் வெளியான தி மேன் ஆல்பம் சமூகவலைதளத்தில் அதிக பார்வையாளர்கள் கவர்ந்து வருகிறது.