தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#HBD கார்த்தி: பருத்தி வீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் பிரபலமான சில இளம் இயக்குநர்கள் நடிகர் கார்த்தியை வைத்தே பிள்ளையார் சுழி போட்டனர்.

karthi birthday
நடிகர் கார்த்தி

By

Published : May 25, 2021, 2:46 PM IST

குணச்சித்திர நடிகரான சிவகுமாருக்கு இரண்டாவது மகனாக 1977ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தவர், நடிகர் கார்த்திக் சிவகுமார். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு, அமீர் இயக்கத்தில் வெளியான ’பருத்தி வீரன்’என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர். அப்படத்தில் 'பருத்தி வீரன்' கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருப்பார். அங்கு தொடங்கியது, அவரது திரைத்துறைப் பயணம்.

பின்னர் 'பையா' படம் மூலம் சாக்லேட் பாயாக மாறிய இவர் இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறினார். அதன்பிறகு, இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் இவர் வல்லவர். புதுமுக இயக்குநர்களாக இருந்தாலும் கதைகள் மக்களுக்கு ஏற்றார் போல் இருந்தால், அதனை உடனே ஏற்று நடிப்பார். தற்போது பிரபல இயக்குநர்களில் சிலர் கார்த்தியை வைத்தே பிள்ளையார் சுழி போட்டிருப்பார்கள்.

உதாரணமாக பா.ரஞ்சித், ஹெச்.வினோத், சிறுத்தை சிவா, லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன் என இவர்கள் அனைவருக்கும் கார்த்தியின் மூலமாகவே திரைத்துறையில் திருப்புமுனை ஏற்பட்டது.

திரைத்துறையின் பின்னணி இருந்தாலும், புதுமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட கார்த்தி, தனது 44ஆவது பிறந்த நாளை இன்று(மே.25) கொண்டாடி வருகிறார். கார்த்தியின் பிறந்தநாளை திரைப் பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிறந்தநாள் வாழ்த்துகள் ‘கவுன்டர் கிங்’ கவுண்டமணி!

ABOUT THE AUTHOR

...view details