பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாகப் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோ ’சர்வைவர்’. தனி தீவில் 90 நாள்களுக்கு விடப்படும் போட்டியாளர்களுக்குப் பலவிதமான சவால்கள் கொடுக்கப்படும்.
அவை அனைத்தையும் முடித்து கடைசிவரை தீவில் சர்வை செய்யும் நபருக்கே ’சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டில் பட்டம் கிடைக்கவுள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவரும் 90 நாள்களுக்கு தீவில் தங்குகிறார்.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மூன்று நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் மாஸ்டர், நடன இயக்குநர், தொகுப்பாளர் என மொத்தம் எட்டு பேர் கலந்துகொள்கின்றனர்.
போட்டியாளர்களின் விவரம்
- நடிகர் விக்ராந்த்
- நடிகர் உமாபதி ராமையா
- நடிகர் நந்தா
- பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி
- நடிகை ஸ்ருஷ்டி டாங்கே
- நடிகை விஜயலட்சுமி
- தொகுப்பாளினி பார்வதி
- ஸ்டண்ட் மாஸ்டர் பெசண்ட் ரவி
வரும் செப்டம்பர் 12ஆம் தேதிமுதல் இரவு 9.30 மணிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோ மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.