தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’என்னை செருப்பால் அடிப்பவரிடம் பேசமாட்டேன்’ - அனிதா சம்பத்தை தாக்கி பேசிய சுரேஷ் - biggboss 4 promo

சென்னை: ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இன்று(அக்.07) அனிதா சம்பத்தை தாக்கி சுரேஷ் பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகிறது.

சுரேஷ்
சுரேஷ்

By

Published : Oct 7, 2020, 1:03 PM IST

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சண்டை போடுபவர்கள் நீண்ட நாள்கள் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என்று தெரிந்துகொண்டு ’பிக்பாஸ் 4’ போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்றைக்கான(அக்.07) இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியானது. அதில், அனிதாவை பேசாதே என்று சுரேஷ் கூற உடனே அவர் நீங்கள் கூறினால் பேசாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார்.

மீண்டும் சுரேஷ்,” நல்ல மாட்டுக்கு ஒரு சூடு இனிமேல் என்னிடம் பேசாதே” என்று கூறுகிறார். இவரின் கோபத்தை புரிந்துகொண்ட ரேகா அவர் சின்ன பெண் விட்டுவிடுங்கள் என்றார். இருப்பினும் சுரேஷ் கடுமையாக பேசுவது போல் ப்ரோமோ முடிந்துள்ளது.

இதையும் படிங்க:பிக்பாஸ் 4- முதல் வார எலிமினேஷன் பட்டியலில் சிக்கிய நான்கு பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details