தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காமசூத்ரா தொடரில் சன்னி லியோன்? - ரசிகர்கள் குஷி - சன்னிலியோன்

பாலிவுட் நடிகை சன்னிலியோன் 'காமசூத்ரா' இணையத்தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sunny Leone

By

Published : Sep 28, 2019, 8:23 AM IST

இயக்குநர் மீரா நாயர் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு 'காமசூத்ரா: ஏ டெல் ஆஃப் லவ்' என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் அப்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் திரையிட தடைசெய்யப்பட்டது.

தற்போது இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது திரைப்படமாக உருவாகாமல் இணையத் தொடராக வெளியாகவுள்ளது. இதை ஏக்தா கபூர் தயாரிக்கவுள்ளார். இத்தொடரில் சன்னி லியோன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தொடர் பண்டைய காலத்து ராஜஸ்தானை ஆண்ட அரசர்களுக்கு பணிவிடை செய்துவந்த தேவதாசி பெண்களான 'கோலி' சமூகப் பெண்கள் குறித்த கதையை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:'அதீரா' சஞ்சய்தத்தை அதிரவைக்கவுள்ள 'தல' தோனி பாலிவுட்டை கலக்குவாரா?

ABOUT THE AUTHOR

...view details