தொலைக்காட்சியில் தனியார் முன்னணி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் ரோஜா. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.
ரோஜா தொடரில் அனு என்னும் வில்லி கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி அக்ஷயா நடித்து வருகிறார். தனது வில்லி தனத்தால் அக்ஷயா தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை இந்த தொடர் மூலம் அமைத்துக்கொண்டார்.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னும் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அக்ஷயா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்ஷயா தனது சமூகவலைதளப்பக்கத்தில், " அனைவருக்கும் வணக்கம், எனக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில் எனக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருந்தது.