திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இன்று (மார்ச் 14) காலமானார். அவருக்கு வயது 61. இவர் கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் லாபம் படத்தை இயக்கி உள்ளார்.
இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார்! - அப்போலோ
10:58 March 14
பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் நிறைவுகட்ட பணிகளை பார்வையிட்டு வீடு சென்றவர் ஸ்டுடியோவுக்கு திரும்பிவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், எஸ்பி ஜனநாதன் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, சுய உணர்வு இல்லாத நிலையில் மயங்கி கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளைச்சாவு அடைந்த அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் நினைவு திரும்பாமலே இன்று (மார்ச் 14) அவர் காலமானார்.
எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையில் தனக்கென தனிப்பாதையில் பயணித்த எஸ்பி ஜனநாதன் இயக்கிய முதல் படமான இயற்கை, தேசிய விருதை வென்றது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படம் மக்களின் மனதை வென்றது குறிப்பிடத்தக்கது.