குறும்படம் ஒன்றில் பாலிவுட் நடிகை கஜோல் - ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
பிரியங்கா பேனர்ஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு 'தேவி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஆப்பிள்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இதையடுத்து 'தேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், நடிகை கஜோல் தனது ட்விட்டரில் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதேபோல் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் 'தேவி' படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, எனது முதல் குறும்படம். வாய்ப்பு அளித்த எலெக்ட்ரிக் ஆப்பிள்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு நன்றி.
தேவி படத்தில் நேகா தூபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வி, சந்தியா ஹத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷ்ஹாஸ்வின் தயமா என அனைவரும் பெண் நடிகர்களாக இருப்பது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 'லாபம்' படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.