தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஃப்ரோசன் 2 படத்தில் ஸ்ருதியுடன் இணைந்த 3 பிரபலங்கள்! - ஹாலிவுட் பேண்டஸி திரைப்படங்கள்

பிறமொழி டப்பிங் படங்களுக்கு டப்பிங் கலைஞர்களைத் தாண்டி பிரபல நடிகர்களைப் பேசவைக்கும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஹாலிவுட் படத்தின் பிரதான கேரக்டருக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுக்கவுள்ளார். அவருடன் தற்போது நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான திவ்யதர்ஷினியும் இணைந்துள்ளார்.

ஃப்ரோசன் 2 படத்தில் ஸ்ருதியுடன் இணைந்த மூன்று பிரபலங்கள்

By

Published : Nov 13, 2019, 10:11 AM IST

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக அமைந்திருந்த ஃப்ரோசன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ள நிலையில் அதன் தமிழ்ப் பதிப்பில் ஸ்ருதி, டிடி, பிகில் பாடலாசிரியர் விவேக் இணைந்துள்ளனர்.

ஹாலிவுட் பேண்டஸி திரைப்படமான ஃப்ரோசன் 2 நவம்பர் 22ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இதன் தமிழ்ப் பதிப்பில் படத்தின் பிரதான கதாபாத்திரமான எல்சா கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் டப்பிங் கொடுத்துள்ளார். இது குறித்து கடந்த இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஃப்ரோசன் 2 படத்தில் எல்சா கேரக்டருக்கு குரல் கொடுக்கும் ஸ்ருதி

இதையடுத்து எல்சாவின் சகோதரி ஆனா கேரக்டருக்கு நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான திவ்யதர்ஷினி டப்பிங் பேசியுள்ளார்.

இதேபோன்று பிகில் பட பாடலாசிரியர் விவேக், படத்தின் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். மேலும், படத்தின் மிகப் பிரபலமான ஓலஃப் கேரக்டருக்கு காமெடி நடிகர் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார்.

ஃப்ரோசன் 2 படத்தில் ஸ்ருதியுடன் இணைந்த மூன்று பிரபலங்கள்
முதல் பாகத்தைவிட இந்த பாகத்தில் மிரட்டும் விஷுவல்கள், வியக்கவைக்கும் திரைக்கதை என ஃபேண்டஸி உலகை ரசிகர்கள் கண்முன் கொண்டுவரும் விதமாக ஃப்ரோசன் 2 இருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தப் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

பிறமொழி டப்பிங் படங்களுக்கு டப்பிங் கலைஞர்களைத் தாண்டி பிரபல நடிகர்களைப் பேசவைக்கும் முறை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் முக்கிய கேரக்டரான ஐயர்ன் மேனுக்கு நடிகர் விஜய் சேதுபதியும் பிளாக் விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது ஃப்ரோசன் 2 படத்தில் ஸ்ருதிஹாசன், திவ்யதர்ஷினி, சத்யன் என மூன்று நடிகர்கள் இணைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details