விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. பின்னர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்போது அவர் திரைத்துறையிலும் கால்பதித்துள்ளார்.
வைரலாகும் சிவாங்கியின் பாடல்! - சினிமா செய்திகள்
'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி பிரபலம் சிவாங்கி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிவாங்கி பாடல்
சாந்தனு, அதுல்யா ரவி நடித்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப்படத்தில் டாக்கு லெஸ்ஸு ஒர்க் மோரு என்ற பாடலை அவரும், அவரது நெருங்கிய நண்பருமான சாம் விஷாலும் இணைந்து பாடியுள்ளனர். அந்த பாடல் தற்போது சமூக வலதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவிக் கேட்ட பாடகி சுசீலா