90’ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவரும், சற்றும் யோசிக்காமல் சொல்லும் பெயர் 'சக்திமான்'. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் 'சக்திமான்'.
சாதாரண மனிதராக இருக்கும் சக்திமான், அந்த ஊரில் தவறு நடக்கும்போது சக்திமானாக மாறி மக்களை காப்பாற்றுவார். இவரைப்பார்த்து வளர்ந்த நாமும், ஒரு நாளாவது சக்திமான் போல் மாற வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அந்த அளவிற்கு இந்தத் தொடர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய, இந்தத் தொடரை மிண்டும் ஒளிப்பரப்ப வேண்டும் என்று சக்திமான் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று மீண்டும் அத்தொலைக்காட்சி சக்திமான் தொடரை ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், “130 கோடி மக்கள் ஒன்றிணைந்து 'சக்திமான்' தொடரை பார்க்க தயாராகுங்கள். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'ராமயாணம்' தொடர்ந்து மறுஒளிப்பரப்பு செய்யப்படும் 'மகாபாரதம்'