தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாயகியான பிரபல தொலைக்காட்சி தொடர் வில்லி - Chaitra reddy serial updates

தொலைக்காட்சி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

சைத்ரா ரெட்டி
சைத்ரா ரெட்டி

By

Published : Aug 18, 2021, 2:39 PM IST

சின்னத்திரையில், 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. இதனையடுத்து இவர் 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' உள்ளிட்ட தொடர்களில் நடித்த சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார்.

சைத்ரா ரெட்டி

'கயல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வெளியாகி வைரலாகிறது.

சைத்ரா ரெட்டி

நடிகை சைத்ரா ரெட்டி கடந்த ஆண்டு தான் தனது நீண்ட நாள் காதலர் ராகேஷ் சமலாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ABOUT THE AUTHOR

...view details