தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சத்தமில்லாமல் பிரபல சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடித்த செம்பருத்தி ஷபானா - செம்பருத்தி ஷபானா

நடிகை ஷபானா பிரபல சின்னத்திரை நடிகருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்கில்  வைரலாகிறது.

ஷபானா
ஷபானா

By

Published : Aug 6, 2021, 7:26 AM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சுமார் 1125 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இத்தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஷபானா நடித்துவருகிறார்.

இவரும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி’ தொடரில் நடிக்கும் ஆர்யனும் காதலித்துவருவதாகக் கடந்த சில மாதங்களாகப் பேசப்படுகிறது. ஆனால் இது குறித்து இருவரும் அறிவிக்காமலிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் கை மேல், தன் கை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். இரண்டு பேர் கையிலும் ஒரேமாதிரியான தங்க மோதிரம் இருந்ததால், அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துவிட்டனர் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆர்யன் தனது பதிவில், "அவரது தூய்மையான இதயத்தால் காதலில் விழுந்தேன். ஒருநாள் எங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி, வெளிப்புற அழகு மங்கிவிடும். ஆனால் மனசுக்கு வயது இல்லை. அதுதான் அன்பு வாழும் இடம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன் வெளியிட்ட பதிவு

இதற்குப் பதிலளித்த ஷபானா, "என்னை வியக்கவைக்க நீங்கள் எப்போதும் தவற மாட்டீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இப்பதிவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:இயக்குநராக கெளதம் மேனனை மிகவும் பிடிக்கும் - கார்த்திக் சுப்புராஜ்

ABOUT THE AUTHOR

...view details