தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மணமகள் ஆகிறார் சானியா மிர்சாவின் தங்கை! மாப்பிள்ளை யார் தெரியுமா? - அனம் மிர்சா - அசாதுதின் திருமணம்

பிரைட்-டூ-பி (மணமகளாகப் போகிறவர்) என்ற எழுத்துகளின் முன்னணியில் நின்றவாறு சானியா மிர்சாவின் தங்கை அணம் மிர்சா எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவரது திருமணம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மணமகள் ஆகிறார் சானியா மிர்சாவின் தங்கை! மாப்பிள்ளை யார் தெரியுமா?

By

Published : Sep 17, 2019, 4:00 PM IST

மும்பை: டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா தங்கை அனம் மிர்சாவும், முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதின் மகன் அசாதுதினும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டு அந்நாட்டு மருமகளானார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இதையடுத்து அவரது தங்கை அனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரைட்-டூ-பி (மணமகளாக போகிறவர்) என்ற எழுத்துக்களுக்கு முன்னே நிற்பது போன்ற புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

தனது தோழிகளுடன் பாரீஸ் சென்றுள்ள அனம் மிர்சா, அங்கு ஜாலியாக பொழுதை கழித்துவருவதை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

தோழிகளுடன் பாரீஸில் அனம் மிர்சா

அதில் ஒன்றாக அவர் வெளியிட்டிருக்கும் இந்தப் படம், அவர் திருமணம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் அனம் மிர்சாவின் இந்தப் போட்டோவை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதின் மகன் அசாதுதினும் - அனம் மிர்சாவும் டேட்டிங்கில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இருவரும் இணைந்தவாறு பல புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தாலும் தங்களது திருமணம் குறித்து அவர்கள் வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

அனம் மிர்சா - அசாதுதின்

இதனிடையே இவர்களின் திருமணத்துக்கான பணிகளை இரு குடும்பத்தினரும் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details