’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரமே போட்டியாளர்கள் கடந்தவந்த பாதைகள், அனுபவித்த வலியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை வேல்முருகன், நிஷா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா ஆகியோர் பேசியுள்ளனர்.
அதில் பேசிய சம்யுக்தா, “நான் மாடலிங் துறையில் பல ஆண்டுகளாக உள்ளேன். ஆனால் நான் என்றுமே என்னை ஒரு சூப்பர் மாடல் என்று கூறியது இல்லை. மருத்துவர் எப்போதும் தன்னை சூப்பர் மருத்துவர் என்று கூறியது இல்லை.
ஆனால் அது எப்படி மாடல் மட்டும் தன்னை சூப்பர் மாடல் என்று சொல்கிறார்” என்று கேள்வி எழுப்பினார். இதைக்கணட மற்ற போட்டியாளர்கள் கைதட்டி சம்யுக்தா பேச்சை ரசித்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான ’பிக்பாஸ் 3’ நிகழ்சியில் கலந்துகொண்ட மீரா மிதுன் தன்னை எப்போது சூப்பர் மாடல் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவரை கலாய்க்கும் வகையில் சம்யுக்தா இதுபோன்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’என்னை யாருடனும் கம்பேர் செய்யாதீர்கள்’ - கதறும் அனிதா சம்பத்!