பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிப்பரபாகும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழில் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல், தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (அக்.24) மற்றும் நேற்று (அக்.25) ஒளிப்பரப்பான எபிசோட்களை நாகார்ஜூனாவிற்கு பதிலாக அவரது மருமகளும், நடிகையுமான சமந்தா தொகுத்து வழங்கினார். ஆட்டம், பாட்டத்துடன் சேலையில் அழகாக நடிகை சமந்தா என்ட்ரி கொடுத்து அசத்தியிருந்தார்.