கலர்ஸ் தொலைக்காட்சியின் ரியால்டி ஷோவான பிக் பாஸ் சீசன்-14 ப்ரோமோ வீடியோவை கடந்த சனிக்கிழமையன்று அத்தொலைக்காட்சி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.
நடிகர்கள், பலதுறை பிரபலங்கள் கலந்துக் கொள்ளும் இந்த ரியால்டி ஷோ மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பொருளாக உள்ளது.
அதே நேரத்தில் தற்போது வெளியான பிக் பாஸ் ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த பிக் பாஸ் சீசன்- 14க்கான ப்ரோமோவில், சல்மான் கான் தனது ஃபார்ம் ஹவுஸில், விவசாயப் பணிகளை செய்து கொண்டும் டிராக்டர் ஓட்டியும் பேசியிருப்பார்.
அதில், "இந்த ஊரடங்கு அனைவரின் இயல்பு வாழ்க்கைக்கு ஒரு ஸ்பீட் பிரேக்காக அமைந்தது. ஆகவே நான் விவசாயம் செய்துவருகிறேன். ஆனால் இந்த சூழ்நிலை தற்போது மாற தொடங்கியுள்ளது" என இயல்பாக தன்னை வெளிப்படுத்திருப்பார்.
பிக் பாஸ் சீசன் - 14 வரும் செப்டம்பர் மாதம் ஒளிப்பரப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க:பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல்; மருத்துவமனையில் அனுமதி