தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் ரியோ! - பிக் பாஸ் 4

சென்னை: 'பிக் பாஸ்' நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் ரியோ ராஜ் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரியோ
ரியோ

By

Published : Oct 4, 2020, 6:56 AM IST

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதுவரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், நான்காவது சீசன் இன்று (அக். 04)முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இதில் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ராஜ் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என்னுடைய முடிவுகள் உங்களுக்கு அதிருப்தி தரலாம். ஆனால் என் செயல்கள் ஒருபோதும் அப்படி இருக்காது. என்னுடைய நண்பர்கள், ரசிகர்களுக்கு Love you all” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நடிகர் ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது உறுதியாகியுள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு, கரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’பிக்பாஸ் 4’ தொடங்கும் தேதி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details