’பிக்பாஸ் 4’ தொடங்கி இன்றுடன் 14 நாள்கள் கடந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் கமல் ஹாசன், எலிமினேட் ஆகும் நபரின் பெயரை அறிவிப்பார்.
அந்தவகையில் இம்முறை கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரேகா, ஆஜீத், ரம்யா பாண்டின், ஷிவானி, வேல்முருகன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நான்காவது சீசனில் இருந்து முதல் நபராக இன்று(அக்.18) ரேகா வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிக்பாஸின் இன்றைக்கான ப்ரோமோவில், கமல்ஹாசன் எலிமினேஷன் குறித்து பேசிய போது அதிகமுறை ரேகா முகம் காண்பிக்கப்பட்டதால் அவரே வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:ஷிவானியை கண்ணாடி கூண்டுக்குள் அடைத்த போட்டியாளர்கள்!