தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சித்ரா தற்கொலைக்கு காரணம் இதுதான்! - நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல்!

சென்னை: பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் நடிகை சித்ரா வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Actress chithra
Actress chithra

By

Published : Jan 20, 2021, 4:57 PM IST

சித்ராவின் நடத்தையில் அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை தொடர்பாக பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக படப்பிடிப்புக்காக, நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நடிகை சித்ரா, டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை தொடர்பாக அவரது கணவர், கணவர் வீட்டார், நண்பர்கள் என பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details