சென்னை: ரம்யா நம்பீசன் முதல்முறையாக இயக்கி, நடித்துள்ள அன்ஹைட் என்ற குறும்படத்தை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை, பாடகி என திரையுலகில் கலக்க வந்த ரம்யா நம்பீசன் தற்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். Ramya Nambessan Encore என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் அவர், தனது இயக்கத்தில் உருவான முதல் குறும்படமான அன்ஹைட் படத்தை வெளியிட்டுள்ளார்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல்கள் ஆகியவற்றிற்கு எதிராகவும், பெண்கள் மீது தீணிக்கப்படும் மரபு சார்ந்த விஷயங்களையும் பளீர் கேள்வி எழுப்பும் விதமாகவும் அப்படம் அமைந்துள்ளது. பெண்கள் குறித்து ஆண்களுக்கு இந்தச் சமூகம் சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் கூறுகிறது. இந்த உலகம் இருபாலினத்தினரையும் சார்ந்தே உள்ளது என்பதை பொட்டில் அறைந்தார்போல் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.