தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Bigg Boss 5 - கமலுக்குப் பதில் இனிமேல் இவர்தானாம் - ரம்யா கிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்
கமல்

By

Published : Nov 27, 2021, 2:13 PM IST

நடிகர் கமல் ஹாசன் காதி துணிகளை அறிமுகம் செய்வதற்காகச் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது

இதன் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். கமல் ஹாசனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது. பிறகு கமல் ஹாசன் காணொலி அழைப்பு மூலம் கலந்துகொள்வார் எனப் பேசப்பட்டது.

ரம்யா கிருஷ்ணன்

இந்நிலையில் பிக்பாஸ் குழுவின் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாக இரண்டு வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணனிடம், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குமாறு அணுகியுள்ளனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை, நாகார்ஜுனாவுக்குப் பதிலாக ஒரு வாரம் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மிகப்பெரிய விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா

ABOUT THE AUTHOR

...view details