தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தொகுப்பாளினியாக வலம் வரப்போகும் ராதிகா சரத்குமார்! - கோடீஸ்வரி நிகழ்ச்சி

நடிகை ராதிகா சரத்குமார் தொகுப்பாளினியாக வலம் வரப்போகும் புது நிகழ்ச்சியின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

Radihka Sarathkumar

By

Published : Oct 17, 2019, 11:07 PM IST

பன்முகத்தன்மை கொண்ட நடிகை ராதிகா சரத்குமார், தனது நடிப்பாற்றலை திரைப்படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நிரூபித்து காட்டிவருகிறார். அதற்கு அவர் நடித்த 20 ஆண்டு கால தொலைக்காட்சி தொடர்களே சாட்சி. சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி உட்பட பல தொடர்கள் தமிழ் மக்களை கவர்ந்தன.

ராதிகா நடித்த 'வாணி ராணி' தொடர் சில ஆண்டுகளுக்கு முன்முடிவடைந்த நிலையில் 'கோடீஸ்வரி' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ராதிகா பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி பிரத்யேகமாக பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், இதன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒட்டு மொத்த 'நம்ம வீட்டு பிள்ளை' குழுவும் கொண்டாடிய சக்ஸஸ் பார்ட்டி...!

ABOUT THE AUTHOR

...view details