பன்முகத்தன்மை கொண்ட நடிகை ராதிகா சரத்குமார், தனது நடிப்பாற்றலை திரைப்படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நிரூபித்து காட்டிவருகிறார். அதற்கு அவர் நடித்த 20 ஆண்டு கால தொலைக்காட்சி தொடர்களே சாட்சி. சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி உட்பட பல தொடர்கள் தமிழ் மக்களைக் கவர்ந்தன.
தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வலம் வர இருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கோன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சியை தமிழில், 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்று நடிகர் சூர்யா தொகுத்து வழங்கினார். தற்போது 'நீங்களும் வெல்லாம் ஒரு கோடி' என்ற நிகழ்ச்சியை 'கோடீஸ்வரி' எனப் பெயர் மாற்றி ராதிகா தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி பிரத்யேகமாக பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது டிசம்பர் 23 ஆம் தேதி பிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது.
கோடீஸ்வரி நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் நடிகை ராதிகா இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை ராதிகா, தனியார் சேனலின் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ராதிகா பேசுகையில், ' பெண்களின் சின்ன சின்ன ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள, இந்த நிகழ்ச்சி, பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு பிரத்யேகமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி நான் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாகும்.
பெண்கள் அறிவாளிகள், விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக முதன்முறையாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டியில் பங்குபெறும் பெண்களிடம் 15 கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளுக்கு ரூபாய் ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பரிசாக வழங்கப்பட உள்ளது. 15 கேள்விகளுக்கும் பதில் அளித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் போட்டி நடத்தப்பட்டு பரிசு அளிக்கப்பட உள்ளன’ என்றார்.
இதையும் வாசிங்க: சிண்ட்ரெல்லா கதையின் இளவரசனாக மாறிய முன்னாள் ஜேம்ஸ் பாண்ட்!