லண்டன்: ஜாக் லாஃபர் என்ற டைவ் விளையாட்டு வீரர் தனது சக நண்பர்களுடன் இணைந்து, அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களில் உள்ள என்ட்ரியை புதுவிதமாக உருவாக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கைப் போடு போட்டது. 'அவெஞ்சர்ஸ் சீரிஸ்' படங்களில் கடைசிப் பகுதியாக வெளிவந்த இதில், வில்லன் தானோஸை ஒட்டு மொத்த அவெஞ்சர் கதாபாத்திரங்களும் சேர்த்து அழிப்பது போல் காட்டப்பட்டது.
இதில், படத்தின் இறுதிக் காட்சியில் 'அவெஞ்சர்ஸ் அசெம்பல்' என்று கூறி ஒவ்வொரு சூப்பர் ஹீரோ கேரக்டர்களும் மாஸாக என்ட்ரி கொடுப்பார்கள்.
இந்த நிலையில், அவெஞ்சர்ஸின் என்ட்ரி காட்சியைப் பிரபல டைவ் விளையாட்டு வீரரான ஜாக் லாஃபர், தனது நண்பர்களுடன் இணைந்து ரீ-கிரியேட் செய்துள்ளார்.