மும்பையில் பிறந்த தமிழ்பெண் பாடகி பிரியா தர்ஷினி. இவர் தற்போது நியூயார்க்கில், இசையமைப்பாளர், பாடகர், வாய்ஸ் ஓவர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருகிறார்.
இவர் இந்தாண்டு மார்ச் மாதம் தனது முதல் ஆல்பமான 'Periphery'யை வெளியிட்டார். தற்போது இந்த ஆல்பமானது சர்வதேச விருதான கிராமிய விருதுக்கு 'பெஸ்ட் நியூ ஏஜ்' என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிராமிய விருது அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதியில் நடைப்பெறவுள்ளது.
கிராமிய விருதுக்கு தனது ஆல்பம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து பிரியா தர்ஷினி கூறுகையில், தனது குழந்தை கால கனவை நனவாக்கியதற்கு நன்றி.
என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனது முதல் ஆல்பம் சர்வதேச விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியே.
இது ஒரு லைவ் ஆல்பம். முழுக்க முழுக்க ஒரு மைக்கில் பதிவு செய்யப்பட்டது. எனது கனவு நனவாகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
மும்பை கோரேகானில் இருந்து ஒரு தமிழ் பொண்னு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. கனவு காணுங்கள். ஏனென்றால் இங்கு எல்லாம் நிச்சயமாக சாத்தியம்.
உங்கள் அன்பும் ஆதரவுக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். பிரியா தர்ஷினி இசைக்கலைஞராக மட்டுமல்லாது மாடலிங், தடகள, நடிப்பு துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் தனது 23 வயதில் 100 மைல் இமயமலை அல்ட்ரா மராத்தான் போட்டியை முடித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.