நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த 'வாமனன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். அதிக தமிழ் படத்தில் நடிக்காமல் இருந்தாலும் இவரை ரசிகர்கள் மறக்கவில்லை. இவருக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கென்று தமிழ் சினிமாவில் தனியிடம் உண்டு.
திரைத்துறையில் இருந்து டிஜிட்டல் தளத்தில் கால் பதித்த பிரியா ஆனந்த்! - பிரியா ஆனந்த் புதிய படங்கள்
நடிகை பிரியா ஆனந்த் தற்போது புதிய இணையத் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
Priya anand
தற்போது இவர், 'சிம்பிள் மர்டர்' (Simplemurder) என்னும் இணையத்தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்க உள்ளார். சச்சின் பதக் இயக்கி வரும் இந்தத் தொடர் விரைவில் சோனி ஸ்ட்ரீமிங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் உருவாகி வரும் இந்த தொடர் விரைவில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.