சென்னை:பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இதில் அக்னி, ஷபானா, ப்ரியா ராமன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சுமார் 1,000 எபிசோட்களை கடந்துள்ள இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இத்தொடரில் ஐஸ்வர்யாவின் தாய் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ராணி திடீரென தொடரில் இருந்து விலகினார். அதனால் அவரது கதாபாத்திரத்தில் முத்த நடிகை உஷா எலிசபெத் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.