ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்களைப் பாடியவரும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்துவருபவருமான பாப் உலகின் ராணி கேட்டி பெர்ரி இந்தியா வந்துள்ளது அவரது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வந்தடைந்த கேட்டி பெர்ரி, வருகிற நவம்பர் 16ஆம் தேதி மும்பையில் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ளார். மிக எளிமையான தோற்றத்தில் மும்பை வந்தடைந்த கேட்டி பெர்ரிக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
முன்னதாக 2010ஆம் ஆண்டு, தனது அன்றைய காதலரும் இன்றைய கணவருமான ரஸ்ஸல் ப்ரேண்ட்டுடன் இந்தியா வந்திருந்த கேட்டி பெர்ரி, தாஜ் மஹால், ஆக்ரா போன்ற இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முதன்முறையாக கேட்டி பெர்ரி இந்தியா வந்துள்ளார். இந்நிகழ்ச்சியை ஒன் ப்ளஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.