தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அரண்மனை கிளி' மைனா எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - மனு பெற்ற காவல்துறை - அரண்மை கிளி

கோவை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அரண்மனை கிளி தொடரை கண்டித்து விஸ்வகர்மா அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

mynaa

By

Published : Aug 30, 2019, 7:47 PM IST

விஜய் தொலைக்காட்சியில் வார நாட்களில் இரவு 9 மணிக்கு 'அரண்மனைக்கிளி' என்ற மெகா தொடர் ஒளிப்பரப்பாகிறது. இதில் நடித்து வரும் நடிகை மைனா, ஆசாரி சாதியை இழிவாகப் பேசி உள்ளதாக விஸ்வகர்மா அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், 'அரண்மனைக்கிளி' தொடரில் நடிகை மைனா விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நேற்று ஒளிப்பரப்பான இத்தொடரில் அவர் திருமணத்திற்கு தாலி செய்யும் ஆசாரி ஒருவரை இழிவாக பேசியது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

இது அச்சாதியினரையும் அவர்கள் செய்யும் தொழிலையும் இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே அத்தொடரின் இயக்குநர், வசன கர்த்தா, தயாரிப்பாளர், நடிகை மைனா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details