கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரையும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கும் உள்ளன.
தொலைக்காட்சியில் ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான தொடர்களை தற்போது மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அதேபோல் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள வெப் சீரிஸ், படங்கள் எனப் பார்த்து அதன் விமர்சனங்களை பலரும் தங்களது சமூகவலைதளத்தில் பதிவிட்டுவருகின்றனர்.
இதனையடுத்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் தொடர்கள் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கங்கள் சில நாட்களில் சலிப்பூட்டுக்கின்றன. எல்லாத் தொடர்களும் ஒரே இருண்ட கதைகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைப் பார்த்த பிறகு அவர்கள் பின்பற்றும் முறை பழையதாகவும், கணித்துவிடக்கூடியாதவும் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை. கலை என்பது இப்போது ஒரு வியாபாரச் சரக்காகிவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'எனது ஆல் டைம் பேவரைட்' - பி.சி. ஸ்ரீராம் குறிப்பிட்ட 'தல' படம்