இருவரும் இணைந்து போட்டியாளர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசித்தனர். இதன் பின்னர் நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராமில், "ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவரும், அழகுப் பதுமையுமான இந்தப் பெண்ணுடன் இணைந்து ஆஸ்கர் போட்டியாளர்களை அறிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்கர் பந்தயத்தில் தேர்வாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். ஏப்ரல் 25ஆம் தேதி வெற்றியாளர்களைக் காண உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கணவர் ஜோனஸின் இந்தப் பதிவுக்கு சற்றும் தாமதம் அளிக்காமல், ஹார்ட் எமோஜியுடன் என்றென்றும் என்னுடம் இருப்பவர் என்று கமெண்ட் அடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரொமாண்ஸுக்குப் பிறகு நடிகை பிரியங்கா தன் பங்கிற்கு ட்விட்டரில் இந்தச் சிறப்புமிக்க தருணம் குறித்த ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தி ஒய்ட் டைகர் படத்துக்காக நாங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளோம். ரமின் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
ஆஸ்கர் விருதின் போட்டியாளராக உள்ளேன் என்பதை நானே அறிவித்துக்கொண்டது சிறப்பான தருணமாக அமைந்தது. மிகவும் பெருமையாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் இணைத்து ஆஸ்கர் விருது தோற்றத்தில் இருக்கும் பொம்மை ஒன்றை கைகளால் அணைத்தும், கணவர் ஜோனஸுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார்.