தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்..! - One lakh fine for actor Vijay

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

By

Published : Jul 13, 2021, 1:19 PM IST

Updated : Jul 13, 2021, 3:22 PM IST

13:16 July 13

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பிரபல தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.

இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, உடனே மனுதாரர், நடிகர் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை.

மக்கள் செலுத்தக்கூடிய வரிதான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.

சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்று செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது, வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும். மேலும், இதற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Last Updated : Jul 13, 2021, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details