தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அண்ணாத்த' ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' - ஒளிபரப்பாகும் நேரம் அறிவிப்பு - ரஜினியுடன் பியர் கிரில்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' தொடர் ஒளிபரப்பாகும் தேதியை டிஸ்கவரி சேனல் தற்போது அறிவித்துள்ளது.

Rajini
Rajini

By

Published : Feb 27, 2020, 10:24 AM IST

Updated : Feb 27, 2020, 12:01 PM IST

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். இதுமட்டுமின்றி படப்பிடிப்பில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் ட்ரெண்டான இந்நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சி மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என டிஸ்கவரி சேனல் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் '#ThalaivaOnDiscovery' என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

"ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதோ தயாராகிக் கொண்டிருக்கிறது. நான் உலகம் முழுவதும் நிறைய பிரபலங்களோடு பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் இது எனக்கு சிறப்புமிக்க ஒன்று' என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இதையும் வாசிங்க: 'அண்ணாத்த’ ஆடுறார் ஒத்திக்கோ - தலைவர் 168 டைட்டில் வெளியானது

Last Updated : Feb 27, 2020, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details