தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இரண்டு மணி நேரம்' வெப் த்ரில்லர் டீஸர் வெளியீடு! - சினிமா பட்டறை

இரண்டு மணி நேரம் '2H' (2 Hours) என்று பெயரிடப்பட்டுள்ள த்ரில்லர் வெப் சீரிஸின் டீஸர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

By

Published : Jun 10, 2020, 6:43 PM IST

ஹாலிவுட்டில் தோன்றிய இணையத் தொடர் கலாசாரம் தற்போது அனைத்து மொழிகளிலும் களம் இறங்கியுள்ளது.

இந்த இணையத் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

மேலும் திரைப்படங்களை போன்று தணிக்கைக் குழு இணையத் தொடருக்கு கிடையாது என்பதால், படைப்பாளர்கள் தங்களது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர்.

இதில் நடிக்க சினிமாவுக்கு இணையாக புதுமுகங்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு '2H' (2 Hours) என்னும் த்ரில்லர் வெப் சீரிஸின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

அமானுஷ்யம், மாந்திரீகம், த்ரில்லர் என டீஸர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தொடர் திருப்பங்களால் பயமுறுத்த வரும் இந்த வெப் சீரிஸ் நாரதர் டிவியின் முதல் தயாரிப்பாகும் என்பது கூடுதல் தகவல்.

ABOUT THE AUTHOR

...view details