உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் சந்தையின் பெரும் பகுதியை பிடித்திருந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியர்களை கவரும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் தளம் பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, ஸ்ட்ரீம் ஃபீஸ்ட் என்று அழைக்கப்படும் இரண்டு நாள் இலவச சேவையை இந்தியாவில் டிசம்பர் மாத தொடக்கத்தின் வார இறுதியான 5-6 ஆகிய தேதிகளில் வழங்குகிறது.
இதன்படி ஓடிடி தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் netflix.com/StreamFest என்ற இணைய யுஆர்எல்லை பயன்படுத்தி இந்த சேவையை பெறலாம். ஸ்மார்ட் பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த இலவச சேவையை பெற தங்களது மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தொடங்கி கொள்ளலாம்.