தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீப காலமாகவே பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதையைத் தேர்ந்தெடுத்து நச்சென நடித்து வருவதில் படுகில்லாடி நயன்தாரா. இவ்வரிசையில் அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
காதலன் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா! - விக்னேஷ் சிவன்
நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் கால்கடுக்க நின்று கொண்டு இருக்க, தனது அடுத்த படத்தை காதலரின் பேனரில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
![காதலன் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4241659-thumbnail-3x2-nayan.jpg)
இந்தப் படத்தை காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார். முன்னதாக நயன்தாராவை வைத்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், காதலிக்காக தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளரானதில் செம குஷியான நயன், இப்படத்துக்காக பிரத்யேகமாக தனது கால்ஷீட்டுகளை அள்ளி கொடுத்திருக்கிறார். இருக்காதா...பின்னே!
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் எனத் தயாரிப்பாளருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.