தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல தொலைக்காட்சி நடிகரின் வீட்டிலிருந்து போதைப்பொருள்கள் பறிமுதல்! - நடிகர் அஜிஸ் கான்

மும்பை: தொலைக்காட்சி நடிகர் கெளரவ் தீக்சிட் (Gaurav Dixit) வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) சோதனை மேற்கொண்டதில் போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

Narcotics Control Bureau
Narcotics Control Bureau

By

Published : Apr 4, 2021, 9:29 AM IST

போதைப்பொருள் வழக்கில் நடிகர் அஜிஸ் கான் மார்ச் 31ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். முன்னதாக அஜிஸ் கானை, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவலர்கள் மும்பை உள்ளிட்ட இரு இடங்களில் தீவிர சோதனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து மும்பையின் லோகண்ட்வாலாவில் உள்ள தொலைக்காட்சி நடிகர் கெளரவ் தீக்சிட் (Gaurav Dixit) வீட்டிலும் நேற்றிரவு (ஏப்ரல் 3) போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பணியகம் (என்சிபி) சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அவரது வீட்டிலிருந்து போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சோதனை நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன்பு கெளரவ் தீக்சிட் (Gaurav Dixit), அவரது வெளிநாட்டுப் பெண் தோழியும் அங்கிருந்து தப்பிவிட்டதாகப் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

அஜிஸ் கானிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாகவும் தப்பிச் சென்றவர்களைத் தீவிரமாகத் தேடிவருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details