பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் இன்று அரசு மரியாதையுடன், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்னை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் நேற்று (செப். 25) முதல் சமூக வலைதளங்களில் பலரும் எஸ்.பி.பி. குறித்து பதிவிட்டுவருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய நாகார்ஜுனா! - S. P. Balasubrahmanyam death
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று (செப். 26) எஸ்.பி.பி.க்கு நடிகர் நாகார்ஜுனா அஞ்சலி செலுத்தினார்.
நாகார்ஜூனா
இந்நிலையில் தெலுங்கில் நடைபெறும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி இன்று (செப். 26) தொடங்குவதற்கு முன்பு தொகுப்பாளர் நாகார்ஜுனா, எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார். நாகார்ஜுனா நடித்த பல படங்களில், எஸ்.பி.பி. பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கூட்டத்தில் விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்!