இந்தியத் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்தி, தெலுங்கு, மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ளன.
பிக் பாஸ் நான்காவது சீசனுக்கு தயாரான நாகார்ஜுனா!
நடிகர் நாகார்ஜுனா பிக் பாஸ் நான்காவது சீசனின் ப்ரோமோ படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இதையடுத்து நான்காவது சீசன் ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கிடையில் கரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் நீடித்தது. இந்நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் நான்காவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை, கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நாகார்ஜுனாவே தொகுத்து வழங்குகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவில் பிக் பாஸ் நான்காவது சீசனின் ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டது. விரைவில் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கரோனா வைரஸ் காரணமாக இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட பிறகு, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே நிகழ்ச்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.