தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கஞ்சா மீது காதல்: கிராமி விருது விழாவில் புறக்கணிக்கப்பட்ட பாப் பிரபலம்! - கிராமி விருதுகள் வழங்கும் விழா

கஞ்சா மீது தான் கொண்ட காதலால்தான், நடந்து முடிந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவிற்கு தான் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக, பிரபல அமெரிக்க பாப் பாடகி மிலே சைரஸ் தெரிவித்துள்ளார்.

மிலே சைரஸ்
பிரபல பாப் பாடகி மிலே சைரஸ்

By

Published : Jan 28, 2020, 6:40 PM IST

சமீபத்தில் நடந்துமுடிந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் மிலே சைரஸ் கலந்துகொள்ளாததும், அதே சமயம் அவரது தந்தை பில்லி ரே சைரஸ், சகோதரி நோவா சைரஸ் ஆகியோர் கலந்துகொண்டதும், மிலேவின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும் கேள்விகளையும் எழுப்பியிருந்தது.

இது குறித்து, 2013ஆம் ஆண்டின் விருது வழங்கும் விழா ஒன்றில், கஞ்சா மீதான தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு ஒன்றை நினைவுகூர்ந்தும், இதனால் தான் கிராமி விருதுகளில் புறக்கணிக்கப்பட்டதாகவும் மறைமுகத் தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிலே பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து விருது விழா ஒன்றில் தான் கஞ்சா புகைக்கும் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், தான் இதனால் விருது விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிலேவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும்விதத்தில், ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பாடல்களுக்கு ப்ரேக் எடுத்த பிரபல பாப் பாடகி!

ABOUT THE AUTHOR

...view details