லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர். கரோனா காரணமாக நீண்ட நாள்களாக வெளியிட முடியாமல் கடந்த பொங்கலன்று உலகம் முழுவதும் மாஸ்டர் படம் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றுள்ளது.
மேலும், வசூலில் பட்டையை கிளப்பிவருவதாக கூறப்படுகிறது. உலகளவில் வசூலில் முதலிடம் பிடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரே தெரிவித்துள்ளார். உலகளவில் அதிக வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையையும் மாஸ்டர் பெற்றுள்ளது.
கரோனா காரணமாக உலகளவில் வேறு எந்த படமும் வெளியாகாததால் மாஸ்டர் படம் உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதிலும், 50 விழுக்காடு இருக்கைகள் கட்டுப்பாடுடன் திரையிடப்பட்டது.
உலக அளவில் வசூலில் முதலிடம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய்க்கும் மேல் மாஸ்டர் படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 80 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: மாஸ்டர் பட வெற்றி: கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!