சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் , விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.
கரோனா காரணமாக நீண்ட மாதங்களாக பூட்டிக்கிடந்த திரையரங்குகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளித்த திரைப்படம் மாஸ்டர் என்றே சொல்லலாம். இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைமில் இன்று(ஜன .29) வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்தார்.